100 ஆண்டு அரச மரத்துக்கு புது வாழ்வு; வேரோடு தோண்டி வேறு இடத்தில் நடப்படுகிறது

மேட்டுப்பாளையம்; சாலையின் ஓரத்தில் இருந்த, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அரச மரம் கிளைகள் வெட்டப்பட்டு, அந்த மரத்தை வேரோடு எடுத்துச் சென்று வளர்க்க சமூக ஆர்வலர்கள் முன்வந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அவினாசி சாலையை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் இரு புறங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பல்வேறு வகையான மரங்கள் வெட்டும் பணிகள் நடைபெறுகின்றன. மேட்டுப்பாளையம் அன்னுார் சாலையில், காபி ஒர்க் ஷாப் அருகே, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரமும், மரத்தின் அடியில் சிறிய கோவிலும் இருந்தது. மரங்களை வெட்ட டெண்டர் எடுத்தவர், சாலையின் ஓரத்தில் இருந்த அரச மரத்தை வெட்டும்போது, இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் கிளைகளை மட்டும் வெட்டுங்கள், இந்த மரத்தை வேறு இடத்தில் நடுகிறோம் என கூறினர்.
இதை அடுத்து மரத்தின் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டன. அடிமரம் வேரோடு கீழே சாய்க்கப்பட்டது. அரச மரத்தை ராட்சத கிரேன் வாயிலாக, டிரைலர் லாரியில் தூக்கி வைக்கப்பட்டது. அதன் பின் மரத்துக்கு பூஜை செய்யப்பட்டது.
பின்பு அரச மரத்தை வெள்ளியங்காட்டுக்கு கொண்டு செல்லும் பணியில், சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை