முல்லைப்பெரியாறு அணைக்கு செயற்பொறியாளர் நியமனம் * -தினமலர் செய்தி எதிரொலி

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் ஓராண்டுக்குப் பின் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் செயற்பொறியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தென் தமிழகப்பகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. மேலும் ஒரு கோடி மக்களுக்கும் மேல் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை இருக்கிறது. அணை தமிழக நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் அணை அமைந்துள்ள பகுதி கேரளாவில் இருப்பதால் அம்மாநில இடையூறு அதிகமாக உள்ளது.
அணை பராமரிப்பிற்காக தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், படகு டிரைவர்கள் என 40க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இதில் அணை செயற்பொறியாளராக இருந்த சாம் இர்வின் , ஓராண்டிற்கு முன் பெரியாறு வைகை மதுரை கோட்டக் கண்காணிப்புப் பொறியாளராக பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்றார். அதன்பின் அணையில் இங்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்கப்படவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் மஞ்சளாறு வடிநில கோட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சப் டிவிஷனில் உதவி செயற்பொறியாளராக இருந்த செல்வம் பதவி உயர்வு பெற்று பெரியாறு அணை செயற்பொறியாளராக பொறுப்பேற்றார். இரு மாநிலங்களுக்கு இடையே அணை பிரச்னை இருந்து வரும் நிலையில் இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை