ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்

பரமக்குடி : -பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் சுவாமி, அம்மன் வீதி வலம் வரும் நிலையில் நாளை திக் விஜயம் நடக்கிறது.

பரமக்குடி சந்திரசேகரசுவாமி, விசாலாட்சி அம்மன் (ஈஸ்வரன்)கோயில் சித்திரை திருவிழா ஏப்.,30 துவங்கி நடக்கிறது.

நேற்று சுவாமி கைலாச வாகனம், அம்மன் காமதேனு வாகனங்களில் உலா வந்தனர்.

இன்று ரிஷப வாகனத்திலும், நாளை குதிரை வாகனத்தில் திக் விஜயம் வருகின்றனர்.

மே 7 கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார்.

Advertisement