குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை

தொண்டி : தொண்டி அருகே குளத்துக்கரையில் கன்று குட்டியை ஈன்று உயிருக்கு போராடிய பசுமாட்டிற்கு மண்டபத்திலிருந்து வந்த கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
கால்நடை வளர்ப்போர் 1962 என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக அழைத்தால் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். அதனை தொடர்ந்து, அவசர உதவி தேவைப்படும் இடத்துக்கு கால்நடைபராமரிப்பு துறையின் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்தில் திருவாடானையில் இயங்கிவந்த ஆம்புலன்ஸ் 5 மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர், உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் வாகனம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஓரமாக நிறுத்தபட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர்.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் பஸ்ஸ்டாண்ட் குளத்தின்கரையில் பசுமாடு கன்று குட்டி ஈன்ற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உரிமையாளர் யார் என்று தெரியாததால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 1962 எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். திருவாடானையில் கால்நடை ஆம்புலன்ஸ் இல்லாததால் மண்டபத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்கள் சென்று பார்வையிட்டதில் கன்று இறந்துவிட்டது.
உடனடியாக பசுமாட்டிற்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினர். திருவாடானையில் கால்நடை பராமரிப்புதுறையின் ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
மேலும்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்
-
போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது; இ.பி.எஸ்., கண்டனம்