இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா, மான்கொம்பு பறிமுதல் சிறுவன் உட்பட மூவர் கைது

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா மற்றும் மான்கொம்பை மண்டபம் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ்க்கு கிடைத்த தகவல்படி தனிப்பிரிவு எஸ்.ஐ., வடிவேல், போலீஸ்காரர் பாரதி ஆகியோர் மண்டபம் மரைக்காயர் தெருவில் உள்ள சதாம்உசேன் என்பவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து 12 கிலோ கஞ்சா பார்சல் மற்றும் இரண்டரை அடி நீளமுள்ள மான்கொம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனை பதுக்கி வைத்திருந்த மண்டபத்தைச் சேர்ந்த முகைதீன் வசீர் 21, முகமது கைப் 20 மற்றும் 16 வயதுள்ள சிறுவன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சாவை, மான்கொம்பை கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு உள்ளனர். கஞ்சாவின் மதிப்பு ரூ. 2 லட்சம். மூவர் மீதும் மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை மதுரை மேலுார் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரை ராமநாதபுரம் சிறையிலும் அடைத்தனர். மான்கொம்பை வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேல்விசாரணையில் தேனி, தென்காசி, கோவை காடுகளில் மானை வேட்டையாடி கொம்பை வெட்டி எடுத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இக்கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதால், அவர்கள் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை