சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'வலை'

திருவாரூரை சேர்ந்தவர் சுதர்சன், 24. இவரது உறவினர், குடவாசலை சேர்ந்த, 17 வயது சிறுமி. இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இருவரும், குடவாசல் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது, சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து குடவாசல் ஒன்றிய மகளிர் ஊர்நல அலுவலர் புகாரின்படி, நன்னிலம் போலீசார், சுதர்சனை போக்சோவில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement