புதிய பென்ஷன் திட்டம் ரத்துகோரிடூவீலர் பிரசாரம் இன்று துவக்கம் மே 16 ல் முதல்வரிடம் மனு வழங்க முடிவு

சிவகங்கை: ''சட்டசபை தேர்தலில் தி.மு.க., அளித்த வாக்குறுதிபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் மே 16 வரை டூவீலர் பிரசார இயக்கம் தமிழக அளவில் நடத்தப்படும்'' என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார்.சிவகங்கையில் அவர் கூறியதாவது:
2003 ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பென்ஷன், பணிக்கொடை, குடும்ப பென்ஷன் கிடைக்கவில்லை. தமிழகம் தவிர்த்து பிற மாநில அரசு ஊழியர்களுக்கு சந்தை மதிப்பிற்கு ஏற்ப அவை வழங்கப்படுகிறது.மேற்கு வங்க மாநிலத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவே இல்லை. ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷனை தான் அமல்படுத்தியுள்ளனர்.
புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 4 ஆண்டுகளை கடந்த பின்பும் இதனை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து தான், இன்று கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கோயம்புத்துார் மாவட்டம் வாளையார், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இருந்து சென்னை நோக்கி டூவீலர் பிரசார இயக்கம் நடத்தப்படும். இதில் இயக்க நிர்வாகிகள் பங்கேற்பர். மே 16 ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
மேலும்
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்