மின்னல் தாக்கி மாணவர் பலி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலராங்கியம் சின்னவீரு மகன் வினோத்குமார் 14. மதுரையில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று மாலை தன் வீட்டில் உள்ள மாடு ஒன்றை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றார். 5:00 மணிக்கு வீடு திரும்பியபோது பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்தது.

கண்மாய் வழியாக வந்த போது மின்னல் தாக்கியதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement