கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி
ஓட்டேரி: ஓட்டேரி, குளக்கரை சாலை பகுதியைச் சேர்ந்தவர் அபினாஷ், 30. இவரது மனைவி உஷா, 28.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, அபினாஷ் வீட்டின் ஹாலிலும், உஷா, பிள்ளைகள் லிங்கேஸ்வரன், 3, நகுலேஸ்வரன், 2, மற்றும் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையுடன், கட்டிலில் துாங்கி கொண்டிருந்தார்.
நேற்று காலை கண் விழித்த உஷா, 2 வயது மகன் நகுலேஸ்வரன், கட்டிலில் இருந்து தவறி விழுந்து, தரையில் சுயநினைவின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, மகனை துாக்கி சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், நகுலேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிந்த ஓட்டேரி போலீசார், பெற்றோரிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement