மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

மணலி: மணலி, பெரியதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காசி, 70. இவர், நான்கு பசுமாடுகளை வைத்து, பிழைப்பு நடத்தி வருகிறார். நேற்று மாலை, மணலி - ஆமுல்லைவாயல் பகுதியில், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.

மாலையில் வீடு திரும்பிய போது, திடீரென மழை பெய்தது. அப்போது, மணலி - லால்பகதுார் சாஸ்திரி தெருவில் வந்து கொண்டிருந்த அவரது பசுமாடு ஒன்று, தெருவிளக்கு கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த மின் ஒயரை மிதித்துள்ளது.

இதில், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து, தகவலறிந்த மின் வாரிய அதிகாரிகள், மின் ஒயர் இணைப்பை சரிசெய்தனர்.

Advertisement