காக்காளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
தாம்பரம்: தாம்பரம் அருகே இரும்புலியூரில், காக்காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், அண்மையில் புனரமைக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி கணபதி பூஜை, கோ பூஜை, நவக்கிரக பூஜைகளுடன் துவங்கியது.
இதையடுத்து, நான்கு கால யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு, கோவில் விமான ஸ்துாபி, ராஜ கோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னிதியில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் மஹா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து, மஹா அபிஷேகம், அம்மன் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement