வீடு பழுது பார்க்கும் திட்டம் பயனாளிகளுக்கு அழைப்பு

அன்னுார்; வீடு பழுது பார்க்கும் திட்டத்தில், பயன்பெற, பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டுக்கு முன்பு அரசு திட்டத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடு, சாய் தள வீடு, ஓட்டு வீடு ஆகியவற்றை பழுதுபார்க்க மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் ஓட்டு வீடுகளுக்கு, அதிகபட்சம் 70 ஆயிரம் ரூபாயும், சாய்வு தள கான்கிரீட் வீடுகளுக்கு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

'இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், பட்டா, வீட்டு வரி ரசீது, ஆதார், வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தை அணுகலாம்,' என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement