கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
அன்னுார்; அ.மேட்டுப்பாளையம், கல்யாண சுப்ரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அன்னுார், சத்தி சாலையில் உள்ள அ. மேட்டுப்பாளையத்தில், முருகப்பெருமானுக்கு, விமான கோபுரத்துடன் புதிதாக கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில், பாலகணபதி, வீரபாகு, கடம்பர் ஆகிய தெய்வங்களுக்கு, சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. முதற்கால வேள்வி நடந்தது. நேற்று முன்தினம் காலையில், இரண்டாம் கால வேள்வியும், விமான கோபுர கலசங்கள் நிறுவுதலும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும் நடந்தது.
நேற்று காலை, வள்ளி, தெய்வானை சமேத, கல்யாண சுப்ரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. விழாவில், கூனம்பட்டி ஆதீனம், ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் அருளுரை வழங்கினார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை