அணு ஆயுதம் பயன்படுத்துவோம்: பாகிஸ்தான் துாதர் நகைச்சுவை

புதுடில்லி: 'இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக, உறுதியான உளவுத் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு நடந்தால், அணு ஆயுதம் உட்பட எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்துவோம்' என, ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் துாதர் கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என, பரவலாக பேசப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், துாதர்கள், ராணுவ அதிகாரிகள் என, பலரும், 'இந்தியா தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்துவோம்' என, கூறி வருகின்றனர்.
'எங்களிடம் அணு ஆயுதம் உள்ளது; அதை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவோம்' என்றும் கூறி வருகின்றனர்.
அந்த வரிசையில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் துாதர் முகமது காலித் ஜமாலி இணைந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் பல உளவு தகவல்களும் இதை உறுதி செய்வதாக உள்ளது.
அதனால், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துவது என்பது எந்த நேரத்திலும் நடக்கலாம். அவ்வாறு நடந்தால், நாங்கள் எங்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்துவோம்.
வழக்கமான ஆயுதங்களுடன், அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தான் கொடியுடன் கூடிய எந்த ஒரு வர்த்தக கப்பல்களும், இந்திய துறைமுகங்ளுக்குள் நுழைவதற்கு தடை விதித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு போட்டியாக, இந்திய கொடியுடன் கூடிய எந்த ஒரு சரக்கு கப்பல்களும் தங்களுடைய துறைமுகங்களுக்குள் வருவதற்கு தடை விதிப்பதாக பாகிஸ்தான் அரசு நேற்று அறிவித்தது.
மேலும்
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
-
ரயிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு