ரயிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

ராமநாதபுரம் : ரயிலில் இருந்து தவறி விழுந்த 75 வயது மூதாட்டியை ரயில்வே போலீசார் மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வர் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 9:15 மணிக்கு புறப்பட்டது.

இந்த ரயிலில் பயணம் செய்த 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி படியருகே பயணம் செய்தவர் ராமேஸ்வரத்திற்கும் பாம்பன் ரயில் நிலையத்திற்கும் இடையே கிளாகாடு பகுதியில் தவறி விழுந்துள்ளார். இது குறித்து ராமேஸ்வரம் வி.ஏ.ஓ., ரொட்ரிகோ புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., இளங்கோவன், எஸ்.எஸ்.ஐ., வேல்முருகன் ஆகியோர் சிராய்ப்பு காயங்களுடன் கிடந்த 75 வயது மதிக்கதக்க மூதாட்டியை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தவறி விழுந்த மூதாட்டி குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை. ராமநாதபுரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement