அக்னி நட்சத்திரம் துவங்கியது: விழுப்புரத்தில் 103 டிகிரி

விழுப்புரம் : அக்னி நட்சத்திர வெயில் துவங்கிய முதல் நாளான நேற்று விழுப்புரம், திருக்கோவிலுாரில் 103.5 டிகிரி வெயில் பதிவானது.
விழுப்புரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் துவங்கி விட்டது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கி வரும் 28ம் தேதி முடிகிறது. கத்திரி வெயில் காலத்தில் வெப்ப அலை அதிகமாக வீசும் என்பதால் பகல் 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளான நேற்று விழுப்புரம், திருக்கோவிலுார் நகரில் நேற்று 103 டிகிரி வெப்பம் பதிவாகியதுடன், வெப்ப அலை வீசியது. இதனால், நகரில் உள்ள முக்கிய சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்ததோடு, வாகனங்களின் போக்குவரத்தும் குறைந்து காணப்பட்டது.
மாலையில் கொட்டிய மழை
திண்டிவனத்தில் நேற்று மாலை 5:30 மணிக்கு பலத்த சூறைக்காற்றுடன் கருமேகம் சூழுந்த நிலையில் 6:00 மணிக்கு கனமழையாக மாறியது. சூறைக்காற்றில் டிஜிட்டல் பேனர்கள் சரிந்து விழுந்தன. காற்றின் காரணமாக 5:30 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பிறகும் மின் நிறுத்தம் நீடித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நேற்று மாலை 6:00 மணிக்குமேல் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, கெடார், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, திடீரென சூறைக் காற்றுடன் மின்னல், இடியுடன் மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளிலேயே பகலில் சுட்டெரித்த வெயில் மாலையில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை