மாஜி முதல்வர் மலிவு விளம்பர அரசியல் செய்கிறார்: அ.தி.மு.க., கண்டனம்
புதுச்சேரி : மாஜி முதல்வர் நாராயணசாமி தன்னிலை மறந்து மலிவு விளம்பர அரசியல் செய்வதை கண்டிக்கிறோம் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் பஸ் நிலையத்திற்கு, ராஜூவ் பெயரை சூட்டுவதில் இரட்டடிப்பு செய்வதாக கூறும் பொய்யான ஆதரமற்ற, குற்றம் சாட்டை அ.தி.மு.க., கண்டிக்கிறது.
முன்னாள் முதல்வருக்கு என்ன ஆச்சு என தெரியவில்லை, ராஜூவ் பற்றி பேச காங்.,க்கு, அறுகதை இல்லை. ராஜீவ் பெயரில் சோனியா துவங்கிய காலை சிற்றுண்டி திட்டத்தை, கருணாநிதி சிற்றுண்டி திட்டம் என நாராயணசாமி பெயர் மாற்றியதால் தான் சோனியா, ராகுல் இன்றளவும் அவரை சந்திக்காமல் தவிர்த்து வருகின்றனர்.
பெயரை மாற்றும் அளவுக்கு ரங்கசாமி அற்ப அரசியல் செய்ய மாட்டார். ஆனால், நாராயணசாமி அற்பதனமாக பேசுவதும், தன்னிலை மறைந்து, பேசும் மலிவு விளம்பர அரசியலை அ.தி.மு.க., கண்டிக்கிறது.
சுதந்திர போராட்ட வீரர் சவர்கர் பற்றி கேவலமாக பேசும் நாராயணசாமி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
பஸ் நிலையத்தில் புதுச்சேரி நகராட்சி அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றார்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை