பால் உற்பத்தியில் அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கு

பெ.நா.பாளையம்; பால் உற்பத்தியில் அறிவியல் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கால்நடை வளர்ப்புக்கான அறிவியல் கருத்தரங்கு நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையத்தில் அட்மா திட்டத்தில் பண்ணை பள்ளி வகுப்பு நடந்தது. இதில், கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, 'பால் உற்பத்தியில் அறிவியல் தொழில்நுட்பம்' என்ற அறிவியல் கருத்தரங்கு நடந்தது. இதில், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம் உதவி பேராசிரியர் அனிதா, கால்நடை பராமரிப்பு முறைகள், நோய் தாக்குதல் அறிகுறிகளை எளிதில் கண்டறியும் முறைகளையும், ஊட்டச்சத்து மேலாண்மை, ஒட்டுண்ணி அழிப்பு முறைகளையும் எடுத்து கூறினார். மேலும், கால்நடை உதவி மருத்துவர் சங்கீதா, பால் உற்பத்தியில் மாடுகளின் இனம் கண்டறிந்து, அதிக பால் தரும் மாட்டு இனங்களை தேர்வு செய்ய வேண்டும், ஜெர்சி, சாகிவால் மாட்டினங்களை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை கூறினார்.

பண்ணை பள்ளி பயிற்சி ஏற்பாடுகள் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தினகரன், மகேந்திரன் செய்து இருந்தனர்.

Advertisement