பொன்னியம்மன் கோவிலில் நாளை தேர் திருவிழா

மயிலம், : கொரளூர் பொன்னியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளை 6ம் தேதி நடக்கிறது.

மயிலம் அடுத்த கொரளூர் பொன்னியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நாளை 6ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement