குழந்தை தொழிலாளர்கள் கண்காணிப்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள், தொழில்நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா என தொழிலாளர் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தும் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement