பொதுக்கூட்டம்

பேரையூர் : பேரையூர் தாலுகா புளியம்பட்டியில் அ.தி.மு.க., மதுரை மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக மே தின பொதுக்கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத தி.மு.க அரசை கண்டித்து பேசினார்.

பொதுக்குழு உறுப்பினர் பாவடியான், முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன், மாணிக்கம், தமிழரசன், நீதிபதி, அம்மா பேரவை இணை செயலாளர் தனராஜன், நிர்வாகி சின்னகருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement