கடலில் விழுந்த மீனவர் பலி
காரைக்கால் : காரைக்காலில் கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழந்தார்.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந் தவர் முருகானந்தம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் நேற்று அதிகாலை அதே பகுதியை சேர்ந்த சைந்தவன், 19 ; உள்ளிட்ட ஐந்து பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். பின் இவர்கள் கரை திரும்பும்போது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகு அங்கும் இங்கும் அலைமோதியது. இதில் சைந்தவன் தடுமாறி கடலில் விழுந்து மாயமானார். சைந்தவனை மீனவர்கள் தேடியும் கிடைக்கவில்லை.
பின் அருகே உள்ள கடற்கரை பகுதியில் சைந்தவன் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த நகர போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
Advertisement
Advertisement