ஏரியில் மூழ்கி இறந்த சிறுவன், சிறுமி; நிவாரண நிதி தலா ரூ.3 லட்சம் வழங்கல்

திருக்கோவிலுார்: கூவாகம் ஏரியில் விழுந்து இறந்த சிறுவன், சிறுமியின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதியாக தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

திருக்கோவிலுார் அடுத்த வடக்குநெமிலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஜெயலட்சுமி, 10; டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி மகன் நித்தேஷ், 5; நேற்று முன்தினம் உளுந்துார்பேட்டை, கூவாகம் ஏரி நீரில் தவறி விழுந்து இறந்தனர்.

இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, இரு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி, வடக்குநெமிலி கிராமத்திற்கு நேரில் சென்று சிறுமி ஜெயலட்சுமியின் பெற்றோரிடம் 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, டி.எடையார் கிராமத்திற்குச் சென்று அங்கு, இறந்த சிறுவன் நித்தேஷ் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

கலெக்டர்கள் கள்ளக்குறிச்சி பிரசாத், விழுப்புரம் ேஷக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலுார் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement