தாய், மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்குப் பதிவு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக தாய், மகனை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அருகே சித்தாத்துார் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் யுகன்,23; இதே கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மகன் அருண்குமார், 25; இருவரும் கடந்த ஒரு மாதம் முன், கபடி விளையாடிய போது வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் யுகனும், அவரது தாய் ராஜவேணி இருவரும், அங்கன்வாடி மையம் அருகே சென்றனர். அப்போது, அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அய்யாசாமி, 32; மணிவண்ணன், 45; மகேஷ்வரி, 44; ஆகியோர் முன்விரோதம் காரணமாக திட்டி தாக்கினர். தடுக்க வந்த யுவன் உறவினர் லதாவையும் திட்டி, தாக்கினர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் அய்யாசாமி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement