நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்

வானுார் : வானுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மொரட்டாண்டி கிராமத்தில் முதல்வர் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

வானுார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி தலைமை தாங்கினார். கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் வரவேற்றார்.

விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

ஒன்றிய சேர்மன்கள் உஷா முரளி, வாசன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாரிமுத்து, புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜி, மைதிலி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் குப்பன்.

முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர்கள் அழகுவேல், அய்யப்பன், வானுார் ஒன்றிய துணை செயலாளர் முத்தமிழ், தி.மு.க., நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், அச்சரம்பட்டு வினோத், அன்பரசு, புஷ்பராஜ், ராஜ், ரஜினி, ஜோதி பிரகாஷ், ராஜகுரு பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement