புதுச்சேரியில் 8 மையங்களில் 'நீட்' தேர்வு

புதுச்சேரி : புதுச்சேரியில் 8 மையங்களில் நடந்த நீட் நுழைவுத் தேர்வை மாணவ, மாணவியர் 4,223 பேர் எழுதினர்.
நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தேர்வு முகமை சார்பில், 2025-26ம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடந்தது.
புதுச்சேரி மாவட்டத்தில் லாஸ்பேட்டை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனுார் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 8 மையங்களில் தேர்வு நடந்தது.
புதுச்சேரியில் நீட் தேர்விற்கு, 4,322 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.
அதில், 4,223 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். 99 பேர் பங்கேற்கவில்லை.
இதேபோல், காரைக்காலில் 2 மையங்கள்,மாகே மற்றும் ஏனாமில் தலா 1 மையங்களில் நீட் நுழைவு தேர்வு நடந்தது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் முழுக்கை சட்டை, துப்பட்டா, பெல்ட், கால்களை மூடும் விதமாக செருப்பு, ஷூ, நகைகள், காப்பு, மொபைல், புளூடூத், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
காலை 11:00 மணி முதல் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்தனர். 11:30 மணிக்கு மேல்கண்காணிப்பாளர்களின் தீவிர சோதனைக்கு பிறகு, மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.மதியம் 1:30 மணிக்கு பிறகு தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்பட்டு, அதன்பின் வந்த மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
மாணவர்களின் நலன் கருதி அரசு மூலம் தேர்வு மையங்களுக்கு 10 ரூபாய் கட்டணத்தில் பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும்
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை
-
ரயிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு