டிஜிட்டல் கிராப் சர்வே பணி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் வேளாண்மை துறையினருடன், தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர், பெருவங்கூர், நீலமங்கலம், நிறைமதி, தென்கீரனுார், பொற்படாக்குறிச்சி மற்றும் விளம்பார் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் தொடர்பான விவரங்கள் குறித்து டிஜிட்டல் கிராப் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண்மை துறை அலுவலர்களுடன், கிராமப்புற வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி மேற்கொள்ளும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்களும் இணைந்து, இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னரசன் தலைமையில் வேளாண் அலுவலர் விஜியலட்சுமி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பணியில் ஈடுபட்டனர்.
இதில் டிஜிட்டல் கிராப் செயலில் நிலத்தின் உரிமையாளர், நிலத்தின் பரப்பளவு, சர்வே எண் மற்றும் பயிர் சாகுபடி குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை