கஞ்சா விற்ற வாலிபர் கைது

மயிலம் : கூட்டேரிப்பட்டில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கூட்டேரிப்பட்டு சந்தை அருகே ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரிடம் நடத்திய சோதனையில், 50 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் கூட்டேரிப்பட்டு முருகா நகர் விரிவாக்க பகுதி அருள் மகன் ஜிவேந்திரன், 24; என்பது தெரியவந்தது.

ஜிவேந்திரனை கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement