சென்னகுணம் ஊராட்சியில் திண்ணை பிரசாரம்

திருக்கோவிலூர்; கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், முகையூர் ஒன்றியம், சென்னகுணம் ஊராட்சியில் திண்ணை பிரசாரம் நடந்தது. இதில் கடந்த கால அ.தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள்வழங்கப்பட்டன.

பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். முகையூர் மத்திய ஒன்றிய பேரவை செயலாளர் ரஞ்சித்குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, தனபால் ராஜ் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுப்பு, மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மண்டல ஐ.டி., விங் துணை செயலாளர் உமாசங்கர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சதீஷ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பேரவை இணை செயலாளர் சுபாஷ் நன்றி கூறினார்.

Advertisement