துாக்கில் தொங்கிய பெயிண்டர்; உடல் கொலையா என போலீஸ் விசாரணை

வானுார்: வானுார் அருகே துாக்கில் தொங்கிய நிலையில் இறந்த பெயிண்டர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வானுார் அடுத்த இடையஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 39; பெயிண்டர். திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு, வெளியே செல்வதாக அவரது தாயார் மல்லிகாவிடம் கூறி விட்டு பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
காலையில் அதே பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மரத்தில் துாங்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர் அணிந்திருந்த சட்டை முழுவதும் மண் ஒட்டி இருந்தது. மேலும், சந்திரசேகரன் ஓட்டிச் சென்ற பைக் சாவி காணாமல் போயிருந்து.
இதனால், தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, மல்லிகா அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து துாக்கில் தொங்க விடப்பட்டரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
-
தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி!
-
மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு வட மாநில இளைஞர் கைது
-
ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா: நாளை திக் விஜயம்
-
குளத்துக்கரையில் உயிருக்கு போராடிய பசுவிற்கு சிகிச்சை