ரோட்டில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்

சிவகங்கை : சிவகங்கை நகர் 7 வது வார்டு சாஸ்திரி 4 வது தெரு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவு நீர் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை நகர் 7 வது வார்டு சாஸ்திரி 4 வது தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்லக்கூடிய பாதாளசாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பெண்கள் முதியவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் பரவுகிறது. நேற்று கழிவு நீர் முழுவதும் ரோட்டில் தேங்கியது. தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லை அதிகரித்துள்ளன. நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து, தடையின்றி கழிவுநீர் செல்ல வழிவகுக்கவேண்டும்.
மானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மிளகனுாரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் போதிய கழிவுநீர் வாய்க்கால் இல்லாத காரணத்தினால் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மிளகனுாரிலிருந்து கட்டிக்குளம் செல்லும் ரோட்டில் ஓடி வருகிறது.
அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் வாய்க்கால் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் ரோட்டில் ஓடும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்
-
போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
-
கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு