ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்

டோரன்டோ: கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் கனடாவில் காலிஸ்தான் பேரணி நடத்தினர்.
சமீப காலமாக ஹிந்து கோவில்கள் மீது சில மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கனடாவில் நடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் சில நாட்களில் இன்று காலிஸ்தான் அமைப்பினர் டோரடண்டோவில் உள்ள மால்டன் குருத்வாரா அருகே நகர் கிர்தான் பகுதியில் பேரணி நடத்தினர். இதில் 8 லட்சம் ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த பேரணியில் டிரக்கில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரது உருவ படத்தை கையில் விலங்கிட்டவாறு கூண்டுக்குள் நிற்பதுபோன்று சித்தரித்து இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பேரணிக்கு கனடிய ஹிந்து சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏறக்குறைய 18 லட்சத்திற்கும் மேல் அங்கு வசிக்கின்றனர். இதில் 8 லட்சம் பேர் ஹிந்துக்கள் உள்ளனர். இவர்களை டார்கெட் செய்து நடந்துள்ள பேரணி கண்டனத்திற்கு உரியது. ஒட்டு மொத்தமாக ஹிந்துக்களை வெளியேற்றப்பட வந்துள்ள குரல் , எண்ணி பார்க்க முடியாத செயல்களுக்கு வழிவகுக்கும். இதனை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. இந்த ஆபத்தான செயலை அனைத்து தலைவர்களும் கண்டிக்க வேண்டும். இவ்வாறு ஹிந்து அமைப்பு கூறியுள்ளது.










மேலும்
-
வண்டல் மண் எடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித்துறை ஊழியர் கைது!
-
நிலநடுக்கத்தால் லேசாக அதிர்ந்த பாகிஸ்தான்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
-
பணத்துக்காக பாட்டியை கழுத்தறுத்து கொன்ற பேரன்; கோவையில் அதிர்ச்சி
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண மூட்டை: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
-
சிலை கடத்தல் விவகாரம்: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
-
கோழிக்கோடு மருத்துவமனையில் மீண்டும் எழுந்த புகை; உயிர் தப்பிய நோயாளிகள்