கோழிக்கோடு மருத்துவமனையில் மீண்டும் எழுந்த புகை; உயிர் தப்பிய நோயாளிகள்

கோழிக்கோடு; கோழிக்கோடு மருத்துவமனையில் புகை வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவில் கோழிக்கோட்டில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். இது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந் நிலையில், அதே கோழிக்கோடு மருத்துவமனையில் இன்று மீண்டும் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் 6வது மாடியில் உள்ள விபத்து பிரிவில் நடந்துள்ளது.அங்கு மின்வாரிய அதிகாரிகள் ஆய்வுக்காக சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு கருதி நான்காவது மற்றும் ஐந்தாவது மாடிகளில் இருந்த நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது;
தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். புகை முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. எதனால் இப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி ப்ரீத்தம் சிங்? யார் இவர் தெரியுமா?
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அவசர கொள்முதல்; இக்லா-எஸ் ஏவுகணையின் சிறப்புகள் இதோ!
-
ஈரோடு சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காவிட்டால் மே 20 முதல் தொடர் உண்ணாவிரதம்: அண்ணாமலை அறிவிப்பு
-
பாகிஸ்தான் ராணுவத்தை புரட்டி அடிக்கும் பலுச் விடுதலை ராணுவம்!
-
பிரீமியர் லீக் போட்டி:டில்லி அணி பேட்டிங்
-
பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை: ராகுல் பங்கேற்பு!