புதிய ஐ.எம்.எப்., செயல் இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்; இவர் யார் தெரியுமா?

புதுடில்லி: சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, இந்தியா சார்பில் பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, இந்தியா சார்பில் கே.வி.சுப்ரமணியம் பொறுப்பு வகித்து வந்தார். இவர், 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிய 6 மாதம் உள்ள நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உலக வங்கியில் தற்போது நிர்வாக இயக்குநராக பணியாற்றும் பரமேஸ்வரன் ஐயர், சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, இந்தியா சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பரமேஸ்வரன் ஐயர் யார்?
* 1981 ம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகளில் தனது பணியைத் தொடங்கிய பரமேஸ்வரன் ஐயர், படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.
* 2009ம் ஆண்டு, உலக வங்கியில் மேலாளராக சர்வதேச அளவில் பணியாற்றுவதற்காக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அங்கு பணியாற்றிய காலத்தில் இவர் சீனா, வியட்நாம், எகிப்து, லெபனான் மற்றும் வாஷிங்டன் ஆகிய இடங்களில் முக்கிய நீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களில் பணியாற்றினார்.
* இவர் பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார்.
* ஒரு அதிகாரியாக இருந்து சர்வதேச மேம்பாட்டு நிபுணராக மாறிய பரமேஸ்வரன் ஐயர் தற்போது ஐ.எம்.எப்., செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மையான தூய்மை மற்றும் சுகாதாரத் திட்டமான ஸ்வச் பாரத் மிஷனை வழிநடத்த அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 2016ம் ஆண்டு பரமேஸ்வரன் ஐயர் இந்தியா திரும்பினார்.
* இவர் நிடி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக சிறிது காலம் பணியாற்றினார்.











மேலும்
-
சீனாவில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்து விபத்து; 10 பேர் பரிதாப பலி
-
பயத்தில் நடுங்கும் பாகிஸ்தான்; மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி நாடகம்!
-
அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன்
-
வணிகர்களிடம் இருந்து மாமூல் வசூலிக்கும் ஆளும்கட்சியினர்; இ.பி.எஸ்., கொந்தளிப்பு
-
இன்று 11, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
பாதுகாப்புத்துறை செயலருடன் பிரதமர் மோடி சந்திப்பு