பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை: ராகுல் பங்கேற்பு!

15


புதுடில்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதல் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கேற்றுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தேடிச்சென்று அழிப்போம் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

அதன்படி பயங்கரவாதிகளை துாண்டி விடும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் முறிவு, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என்பதை தொடர்ந்து, போர் பாதுகாப்பு ஒத்திகைகளை இந்தியா தொடங்கியுள்ளது. இது தொடர்பாக முப்படை தளபதிகள், மூத்த அமைச்சர்கள், பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தாக்குதல் நடத்துவதற்கான முழு சுதந்திரத்தை முப்படைகளுக்கு வழங்கியுள்ளார்.


இதன் அடுத்த கட்டமாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இன்று பிரதமர் அலுவலகம் சென்றார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த, சி.பி.ஐ., அமைப்பின் அடுத்த தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனையில் அவர் கலந்து கொண்டார். கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவும் பங்கேற்றார்.



பாகிஸ்தான் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேரில் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement