டில்லி அணி நிதான ஆட்டம்: ஐதராபாத் அணிக்கு 134 ரன்கள் இலக்கு

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்துள்ளது.



பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 55 ஆவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டில்லி அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

இதனை அடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த டில்லி அணி வீரர் கருண் நாயர், ஐதராபாத் அணி வீரர் கம்மின்ஸ் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, 3 ரன்கள் மட்டுமே அடித்து, அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார் பிலெச்சிஸ்.

விக்கெட்டுகள் சரிவு:

டில்லி அணி வீரர்கள், கருண் நாயர் (0), டு பிலெசிஸ் (3), அபிஷேக் போரல் (8), அக்சர் பட்டேல் (7) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து கே.எல்.ராகுல் 10 ரன்களில் அவுட் ஆனார்.

த்ரிஸ்டன் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா ஒரளவுக்கு நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் அஷூதோஷ் ஷர்ம, 41 ரன்களில் ஆட்டமிழந்தார். த்ரிஸ்டன் ஸ்டப்ஸ்,ஆட்டமிழக்காமல் 41 ரன்கள் சேர்க்க, டில்லி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஐதராபாத் அணியின் கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழத்தினார்.

இதனை தொடர்ந்து ஐதராபாத் அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement