ஸ்குவாஷ்: அபய் சிங் 'சாம்பியன்'

நியூயார்க்: ஹைதர் டிராபி ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அபய் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஹைதர் டிராபி ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் அபய் சிங், இங்கிலாந்தின் சாம் டாட் மோதினர். மொத்தம் 50 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அபய் சிங் 3-1 (11-8, 10-12, 11-9, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
சென்னையை சேர்ந்த அபய் சிங் 25, கடந்த ஆண்டு மலேசியாவில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள், கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றிருந்தார். கடந்த மார்ச் மாதம் வெளியான பி.எஸ்.ஏ., உலக தரவரிசையில் முதன்முறையாக 'டாப்-50' வரிசையில் (45வது இடம்) இடம் பிடித்தார். அமெரிக்காவின் சிகாகோவில் வரும் மே 9-17ல் நடக்கவுள்ள உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் வேலவன் செந்தில்குமார், வீர் சோத்ரானி, ரமித் டான்டன் ஆகியோருடன் அபய் சிங் இடம் பெற்றுள்ளார்.

Advertisement