மயாமி 'பார்முலா-1': ஆஸி., வீரர் முதலிடம்

மயாமி: மயாமி 'பார்முலா-1' கார்பந்தயத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்ட்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

நடப்பு ஆண்டுக்கான 'பார்முலா-1' கார்பந்தயம் 24 சுற்றுகளாக நடக்கிறது. அமெரிக்காவின் மயாமி நகரில், 6வது சுற்று நடந்தது. இதில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 28 நிமிடம், 51.587 வினாடியில் கடந்த 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சமீபத்தில் பஹ்ரைன், சவுதி அரேபியாவில் அசத்திய பியாஸ்ட்ரி, 'ஹாட்ரிக்' கோப்பை வென்றார். நடப்பு சீசனில் 4வது பட்டம் வென்ற பியாஸ்ட்ரி, சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 131 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அடுத்த இரு இடங்களை 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் லாண்டோ நோரிஸ், 'மெர்சிடஸ்' அணியின் ஜார்ஜ் ரசல் கைப்பற்றினர். 'நடப்பு உலக சாம்பியனும்', 'ரெட் புல் ரேஸிங் ஹோண்டா' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 4வது இடம் பிடித்து ஏமாற்றினார். 'பெராரி' அணியின் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டனுக்கு 8வது இடம் கிடைத்தது.

Advertisement