பில்லியர்ட்ஸ்: அத்வானி 'சாம்பியன்'

மும்பை: கிளாசிக் பில்லியர்ட்ஸ் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார்.
மும்பையில், சி.சி.ஐ., கிளாசிக் பில்லியர்ட்ஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, துருவ் சிட்வாலா மோதினர். பில்லியர்ட்ஸ், ஸ்னுாக்கரில் 28 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி 5-2 (10-150, 150-148, 81-150, 150-96, 150-136, 150-147, 150-137) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 'ஹாட்ரிக்' பட்டத்தை (2023-2025) தட்டிச் சென்றார்.
பங்கஜ் அத்வானிக்கு கோப்பையுடன் ரூ. 2.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த துருவ் சிட்வாலா, ரூ. 1.5 லட்சம் பரிசாக பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement