ருடுஜா ஜோடி கலக்கல்

லொபோட்டா: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ருடுஜா போசாலே, நியூசிலாந்தின் பெய்ஜ் மேரி ஜோடி சாம்பியன் ஆனது.
ஜார்ஜியாவில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா ஷுப்லாட்ஸே ஜோடி, இந்தியாவின் ருடுஜா போசாலே, நியூசிலாந்தின் பெய்ஜ் மேரி ஜோடியை எதிர்கொண்டது. இதில் ருடுஜா, பெய்ஜ் மேரி ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Advertisement