சென்னை அணியில் உர்வில் படேல்

சென்னை: சென்னை அணியில் காயத்தால் விலகிய வன்ஷ் பேடிக்கு பதிலாக உர்வில் படேல் ஒப்பந்தமானார்.

பிரிமியர் லீக் 18வது சீசனுக்கான சென்னை அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் வன்ஷ் பேடி 22, இடம் பெற்றிருந்தார். இவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில் பிரிமியர் தொடரில் இருந்து பாதியில் விலகினார். இவருக்கு பதிலாக குஜராத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் படேல் 26, அடிப்படை ஏலத்தொகையான ரூ. 30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு திரிபுராவுக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபியில், 28 பந்தில் சதம் விளாசிய உர்வில் படேல் (குஜராத்), 'டி-20' அரங்கில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை அபிஷேக் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த 2023ல் நடந்த பிரிமியர் தொடரில் குஜராத் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதுவரை 42 'டி-20' போட்டியில் (1162 ரன், 2 சதம், 4 அரைசதம்) விளையாடி உள்ளார்.

Advertisement