தி.மு.க., சாதனை விளக்க கூட்டம் கட்சியினர் பங்கேற்க மா.செ., அழைப்பு
நாமக்கல்:'தமிழக அரசின், நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் நடக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., வெளியிட்ட அறிக்கை: தி.மு.க.,வின், நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் சட்டசபை தொகுதிகளில் நடக்கிறது. அதன்படி, ராசிபுரம் சட்டசபை தொகுதியில், வரும், 8 மாலை, 6:00 மணிக்கு, முள்ளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்; 9 மாலை, 6:00 மணிக்கு, ராசிபுரம் விஜயலட்சுமி தியேட்டர் அருகில்; 11 மாலை, 6:00 மணிக்கு, சிங்களாந்தபுரம் பஸ் ஸ்டாப்; 12 மாலை, 6:00 மணிக்கு, பொன்பரப்பிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகிலும் நடக்கிறது.
சேந்தமங்கலம் தொகுதியில், 10 மாலை, 6:00 மணிக்கு, வரகூர் பஸ் ஸ்டாப்; 11 மாலை, 6:00 மணிக்கு, பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்; 12 காலை, 10:00 மணிக்கு, செம்மேடு பஸ் ஸ்டாண்டில் நடக்கிறது. நாமக்கல் தொகுதியில், வரும், 8 மாலை, 6:00 மணிக்கு, கீரம்பூர் மாரியம்மன் கோவில்; இரவு, 7:00 மணிக்கு, சிட்கோ காலனி, காவேட்டிப்பட்டி; 9 மாலை, 6:00 மணிக்கு, ராசிபாளையம் காட்டுபிள்ளையார் கோவில் அருகே, 9 இரவு, 7:00 மணிக்கு, அன்னை சத்யா நகர், 30-வது வார்டு. வரும், 10 மாலை, 6:00 மணிக்கு, புதுச்சத்திரம் பஸ் ஸ்டாப்; 11 மாலை, 6:00 மணிக்கு, செல்லப்பம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே; 12 மாலை, 6:00 மணிக்கு, சின்னமுதலைப்பட்டி, 4வது வார்டு ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
சாதனை விளக்க பொதுக்கூட்டம், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. பேச்சாளர்கள், இளம் பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். அந்தந்த பகுதி ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும்
-
தொண்டர் தலையில் துப்பாக்கி; விஜய் பாதுகாவலரால் திகில்
-
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தமிழகத்தில் பதுங்கலா: பா.ஜ.,
-
இலங்கை - இந்திய மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: பவன் கல்யாண்
-
அமெரிக்க பயணத்தில் அரசியல் பேச்சு அடியோடு தவிர்த்தார் அண்ணாமலை
-
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கைது
-
காஷ்மீரில் 6 நீர்மின் நிலைய பணிகள் துவக்கம்? சிந்து நதி ஒப்பந்தம் ரத்தால் மத்திய அரசு வேகம்