பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தமிழகத்தில் பதுங்கலா: பா.ஜ.,

மதுரை: தமிழக பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் ஆதரவோடு பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பயங்கரவாதிகள் தமிழகம் வழியாக இலங்கை தப்பிச் சென்றனர் என, ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இலங்கைக்குதான் சென்றனரா அல்லது தமிழகம் தான் பாதுகாப்பானது எனக் கருதி, இங்கேயே தங்கியிருக்கின்றனரா?
வங்கதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் கூலி வேலைக்கு வந்துள்ளதாக சொல்கின்றனர். அவர்கள் உண்மையிலேயே வேலைக்கு வந்தனரா அல்லது உளவு பார்க்க வந்துள்ளனரா என்பதை ஆராய்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், வங்கதேசத்தினரை இந்த மண்ணிலிருந்து அகற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
வங்கதேசத்தினர் மட்டுமல்ல, அனுமதி பெறாமல் நாட்டிற்குள் வந்துள்ள யாராக இருந்தாலும் அவர்களை வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!
-
அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
-
இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி
-
'ஆபரேஷன் சிந்துார்' குறித்து இந்திய ராணுவம் சொன்ன 10 முக்கிய விஷயங்கள் இவை தான்!
-
எல்லையில் பதற்றம்; மும்பை - பஞ்சாப் லீக் போட்டி மாற்றம்