அரசு பள்ளியில் விளையாட்டுமைதானம் அமைக்க எதிர்ப்பு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, நேற்று மாலை, 6:00 மணி
க்கு நடக்க இருந்தது. துணை முதல்வர் உதயநிதி, காணொலியில் துவக்கி வைக்க இருந்தார்.இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மினி விளையாட்டு மைதானம் அமைத்தால், உள்ளூர் மாணவர்கள் விளையாடுவது பாதிக்கப்படும்; ஏழை மாணவர், இந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனக்கோரி, பா.ஜ., சேந்தமங்கலம் ஒன்றிய தலைவர் பாண்டியன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், சேந்தமங்கலம், சின்ன தேர்முட்டி முன் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கலைந்துபோக செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சேந்த
மங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
-
சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கல்
-
ராமேஸ்வரத்தில் சட்டசபை மனுக்கள் குழு ஆய்வு
-
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
-
சித்திரை திருவிழாவில் நடராஜர் வீதி உலா: மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்
-
அரசு ஊழியர்களுக்கு 110 விதியில் அறிவிக்கப்பட்டவை சலுகை அல்ல; போட்டுடைத்த அரசு ஓய்வூதியர் சங்கம்
-
சாயல்குடியில் வெப்ப வாதம் குறித்த விழிப்புணர்வு