அ.தி.மு.க.,வினர் தெருமுனை பிரசாரம்


மல்லசமுத்திரம்:நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., அம்மா பேரவை மற்றும் மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றியம் சார்பில், வையப்பமலையில் நேற்று, தெருமுனை பிரசாரம் நடந்தது.

இதில், முந்தைய அ.தி.மு.க., அரசின், 10 ஆண்டுகால சாதனை, தற்போதைய தி.மு.க., அரசின் நான்கு ஆண்டுகால அவலங்கள் என்ற தலைப்பில், வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் பரணிதரன், ராசிபுரம் நகர செயலாளர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement