சிறு விளையாட்டு அரங்கத்துக்கு அடிக்கல்

ஈரோடு:சென்னை நேரு ஸ்டேடியத்தில் இருந்து, சென்னை ஒலிம்பிக் அகாடமியில் காணொலி காட்சி மூலம், விளையாட்டு துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில், 18 சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிக்கு, துணை முதல்வர் உதயநிதி நேற்று அடிக்கல் நாட்டினார்.



இதன்படி ஈரோடு சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியை துவக்கி வைத்தார். இந்த அரங்கில், தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி மற்றும் சில விளையாட்டுக்கான வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

Advertisement