சென்னிமலை கிராமங்களில் வெளியூர்தொழிலாளர்களின் விபரம் சேகரிப்பு
சென்னிமலை:சிவகிரி அருகே வயதான தம்பதி அடித்து கொலை செய்யப்பட்டனர். இதில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க, ௧௨ தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சென்னிமலை அருகே கிராமங்களில் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
இங்குள்ள பல கிராமங்களில் வெளியூர்களில் இருந்து வந்த ஆண், பெண் தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் பணி, குச்சி கிழங்கு பிடுங்கும் பணி, மஞ்சள் வெட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் விபரங்களை கிராமம், கிராமமாக சென்று சேகரித்து வருகின்றனர். எந்த ஊர், எவ்வளவு நாட்களாக தங்கியுள்ளீர்கள், இதற்கு முன்பு எத்தனை முறை கூலி வேலைக்கு இங்கு வந்துள்ளீர்கள் போன்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர். அவர்களுடைய மொபைல்போன் எண்களையும் பெற்று வருகின்றனர். இந்த பணியில் சென்னிமலை பகுதியில் மட்டும், 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளோடு போலீசார் அறிவிப்புசிவகிரி தம்பதி கொலையில் குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின்போது தங்களின் சுய அடையாள அட்டை, வாகன அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், வண்டி இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றை காவல்
துறைக்கு வழங்கி, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
உங்கள் அருகாமை வீடுகளில் வெளியூர் நபர்கள் தங்கியிருந்தாலோ அல்லது நோட்டமிட்டாலோ, சந்தேகப்படும் வகையில் இருந்தாலோ, உடனடியாக வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு, 94981 01253 என்ற எண்ணில் தகவல் தரலாம் என்று, வெள்ளோடு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி