கோடை விடுமுறையிலும் கை வைக்கலாமா?தணிக்கையால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்
ஈரோடு:ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து வகை அரசு பள்ளிகளிலும், 2024-25 ஆண்டுக்கான முன் தணிக்கை, ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தீர்மான ஏடு, வவுச்சர், கேஸ் புக் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க, அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று அம்மாபேட்டை, அந்தியூர் வட்டாரத்தில் தணிக்கை குழு, பணியை மேற்கொள்ள துவங்குகிறது. நாளை பவானி, ஈரோடு, பவானிசாகர், சத்தியில்-8ல்; சென்னிமலை, பெருந்துறையில்-9ம் தேதி; கோபி, டி.என்.பாளையத்தில்-12ம் தேதி, நம்பியூரில்-13, தாளவாடியில்-14, கொடுமுடி, மொடக்குறிச்சியில்-16ல் தணிக்கை நடக்கிறது. இது
தற்காலிக பட்டியல்தான். தணிக்கை குழு எந்த தேதியிலும் பள்ளிக்கு வரலாம். எனவே தலைமை ஆசிரியர்களும் தயார் நிலையில் இருக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் தரப்பில் ஆட்சேபம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மே மாதத்தில் சில தினங்கள் மட்டும் தான் குடும்பத்துடன் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கும், சுற்றுலா- ஆன்மிக பயணம் மேற்கொள்கிறோம். மே இறுதி வாரத்தில் பள்ளி சேர்க்கை, பாட புத்தகம், நோட்டு வருகைக்காக பள்ளிக்கு வர வேண்டும். இந்த வகையில் பார்த்தால் மே மாதத்தில், 15 நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைக்கிறது. தற்போது அதுவும் பறிபோகவுள்ளது.
மே, 20 வரை தணிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர். தணிக்கை குழு வந்தால் ஒரு வாரம் வரை பல்வேறு பணிகளை பள்ளியில் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கழிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி