கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்புசி.ஐ.டி.யு.,வினர் வாக்குவாதம்




ஈரோடு:தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனைத்து வகை கொடி கம்பங்களையும் அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான கால கெடுவும் கடந்த, 4ல் நிறைவு பெற்றது. ஈரோடு மாநகராட்சியில் மண்டலம் வாரியாக மாநகராட்சி அலுவலர்கள், நேற்று ஆய்வு நடத்தினர்.


இதில், 12வது வார்டுக்கு உட்பட்ட இ.பி.பி. நகரில், சி.ஐ.டி.யு. கொடிக்கம்பம் இருந்தது. கெடு முடிந்தும் அகற்றாததால் மாநகராட்சி பணியாளர்கள் அகற்ற முற்பட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமையிலான அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல், 22வது வார்டிலும் கொடிக்கம்பத்தை அகற்ற சி.ஐ.டி.யு.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் உறுதியான உத்தரவு பிறப்பித்து, நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வழிவகை செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement