கன்னிமாரா நுாலகத்தில் காரல் மார்க்ஸ் சிலை: முதல்வர்

சென்னை: சென்னை கன்னிமாரா நுாலக நுழைவாயிலில், காரல் மார்க்ஸ் சிலை அமைப்பதற்கான பணி நடந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது சமூக வலைதளப் பதிவு:

சமத்துவ உலகை கட்டமைப்பதற்கான பொதுவுடமை கருத்தியலை வழங்கிய காரல் மார்க்ஸ் பிறந்த நாளில், எல்லாருக்கும் எல்லாம் என்ற லட்சியப் பயணத்தில் வெல்வதற்கு உறுதி கொள்வோம்.

உழைப்போருக்கு உறுதுணையாக மார்க்சிய சிந்தனையை எடுத்து இயம்ப, கன்னிமாரா நுாலக நுழைவாயிலில், காரல் மார்க்ஸ் சிலை நிறுவுவதற்கான இடத்தை, நானே நேரில் சென்று தேர்வு செய்தேன். சிலை அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. சிலையாக எழுந்து நிற்கவுள்ள மார்க்ஸின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்திற்கு என்றும் ஒளி வழங்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement